வலி. வடக்கு பிரதேசத்தில் சுமார் 2500 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளதால், மக்கள் 36 வருடங்களாகத் தவிப்பதாக வலி. வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் கவலை வெளியிட்டுள்ளார். மயிலிட்டி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா குரும்பசிட்டி பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற போது அவர் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். 📍 மயிலிட்டி நூலகம்: ஏனைய நூலகங்கள் சிறப்பாக இயங்கினாலும், மயிலிட்டி உப அலுவலகத்திற்குட்பட்ட நூலகம் வசாவிளான் சந்தியில் இன்றும் ஆக்கிரமிப்பின் கீழேயே உள்ளது. வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயத்திற்குச் செல்லும் வீதி திறக்கப்பட்டாலும், பாடசாலை இன்னும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே முடக்கப்பட்டுள்ளது. தற்காலிக இடங்களில் இயங்கும் போதிலும், வசாவிளான் மத்திய கல்லூரி மற்றும் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலய மாணவர்கள் வாசிப்புப் போட்டிகளில் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ⚠️ தென்னிலங்கையினூடாகக் கொண்டு வரப்பட்டுள்ள “பிரஜாசக்தி” திட்டமானது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலாகும் என தவிசாளர் இதன்போது எச்சரித்தார். “மக்கள் யாரிடமும் மண்டியிடத் தேவையில்லை. உங்கள் தேவைகளுக்கு நேரடியாக பிரதேச சபையை அணுகி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.” என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ________________________________________ #ValikamamNorth #Jaffna #LandRelease #Myliddy #Vasavilan #TamilPeople #Sogirthan #NationalReadingMonth #Rights #SriLankaPolitics #ValiNorthPS
📢 வலி. வடக்கில் நீடிக்கும் நில ஆக்கிரமிப்பு: “சொந்த மண்ணில் வாழ 36 ஆண்டு கால ஏக்கம்!” – Global Tamil News
1