⚖️ போஜ்ஷாலா வளாகத்தில்  சரஸ்வதி பூஜை – வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த உச்ச...

⚖️ போஜ்ஷாலா வளாகத்தில்  சரஸ்வதி பூஜை – வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி – Global Tamil News

by ilankai

மத்தியப் பிரதேசத்தின் சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா (Bhojshala) வளாகத்தில் வழிபாடு நடத்துவது தொடர்பா உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் தார் (Dhar) மாவட்டத்தில் அமைந்துள்ள 11-ஆம் நூற்றாண்டு நினைவுச் சின்னமான போஜ்ஷாலா வளாகத்தில், நாளை சரஸ்வதி பூஜையையும் , வெள்ளிக்கிழமை தொழுகையும் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாளை (ஜனவரி 23, 2026) வெள்ளிக்கிழமை என்பதால், அன்றைய தினம் வளாகத்தின் ஒரு பகுதியில் இந்துக்கள் சரஸ்வதி பூஜை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள அதே வேளையில்,  முஸ்லிம்கள் தங்களின் வழக்கமான வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு சமூகத்தினரும் தத்தமது வழிபாடுகளை அமைதியான முறையில் முன்னெடுக்க ஏதுவாக இந்த இடைக்கால ஏற்பாட்டை நீதிமன்றம் செய்துள்ளது. இந்த வளாகத்தை இந்துக்கள் ‘வாக்தேவி’ (சரஸ்வதி) கோவில் என்றும், முஸ்லிம்கள் ‘கமால் மௌலா மசூதி’ என்றும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான பிரதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தார் மாவட்ட நிர்வாகம் போஜ்ஷாலா வளாகத்தைச் சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பைப் போட்டுள்ளது. வழிபாட்டு நேரங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Tag Words: #Bhojshala #SupremeCourt #MadhyaPradesh #SaraswatiPuja #FridayPrayers #Dhar #LegalVerdict #UnityInDiversity #BreakingNewsIndia

Related Posts