⚖️ உடுகம சுமங்கல தேரர்  CIDயில்   வாக்குமூலம் – Global Tamil News

by ilankai

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு குறித்து விசாரணை நடத்துவதற்காக, உடுகம சுமங்கல தேரர் இன்று (ஜனவரி 22, 2026) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டிருந்தார். கல்விச் சீர்திருத்தங்கள் (Education Reforms) தொடர்பாக அவர் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்த முறைப்பாடு குறித்து மேலதிக வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனர். இன்று காலை 11:00 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்த தேரர், சுமார் இரண்டரை மணிநேரம் அங்கிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், பிற்பகல் 1:30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நாட்டின் கல்வி முறையில் கொண்டு வரப்படவுள்ள புதிய மாற்றங்கள், கலாசார மற்றும் மத விழுமியங்களைப் பாதிக்கக்கூடும் எனப் பல்வேறு தரப்பினர் அச்சம் தெரிவித்து வரும் நிலையில், இந்த விசாரணை முக்கியத்துவம் பெறுகின்றது. Tag Words: #CID #SriLankaPolice #EducationReforms #UdugamaSumangalaThero #LegalInvestigation #LKA #BreakingNews2026 #NationalSecurity

Related Posts