by admin January 22, 2026 written by admin January 22, 2026 பிரான்சில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது கர்ப்பிணி மனைவியைக் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக அந்நாட்டு நீதிமன்றத்தால் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், பிரான்சில் வசித்து வந்த நிலையில், தனது மனைவியை நீண்டகாலமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பிணியாக இருந்த நிலையிலும், அவர் மீது மிகக் கொடூரமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கென சில ஆயுதங்களையும் அந்த இளைஞர் பயன்படுத்தியதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த பிரான்ஸ் நீதிமன்றம், பெண்ணின் மீதான வன்முறை மற்றும் சித்திரவதையை உறுதி செய்தது. இதற்காக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியதோடு, தண்டனைக் காலம் முடிந்த பிறகு அவர் பிரான்சில் வசிக்கத் தடை விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு அந்நாட்டு சட்டங்கள் கடும் தண்டனைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பிரான்ஸ் சட்டம் மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு சான்றாகும். Related News
பிரான்சில் கொடூரம்: கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 ஆண்டுகள் சிறை! – Global Tamil News
2