நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க தயார் – Global Tamil News

by ilankai

இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முக்கிய கருத்துக்களை தொிவித்துள்ளாா் கொழும்பில் நடைபெற்ற One Text Initiative பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதிய அரசியலமைப்பின் அவசியம் குறித்தும், அரசாங்கத்தின் தற்போதைய நகர்வுகள் குறித்தும் காட்டமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். அங்கு  உரையாற்றிய அவா் நாட்டிற்குப் புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை. தற்போதைய அரசாங்கத்திடம் அதற்கான மக்கள் ஆணை உள்ளது. சிவில் சமூக அமைப்புகளும் இதற்கான முன்முயற்சிகளை எடுக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்துள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் இடம்பெற்றுள்ளது. இதனைச் செய்ய எதிர்க்கட்சி முழு ஆதரவு வழங்கும்.இந்த மாற்றங்களை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருந்தாலும், அரசாங்கம் இதற்குத் தயக்கம் காட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகங்கள் ஆகிய நான்கு தூண்களும் தத்தமது எல்லைகளுக்குள் (Checks and Balances) சுதந்திரமாகச் செயற்பட வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். மேலும் அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்படுவதையும், குறிப்பாகச் சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கையையும் தான் வன்மையாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார். அரசாங்கம் மக்களைச் சாதாரணமாகக் கருதி இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாக அவர் சாடினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு, நாடு மீண்டும் நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு (Westminster System) திரும்பினால் ஜனாதிபதி என்பவர் பெயரளவு அரச தலைவராக (Ceremonial Head of State) மட்டுமே இருப்பார். உண்மையான நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் பிரதமர் மற்றும் அமைச்சரவையிடம் மாற்றப்படும். தற்போதைய முறையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டியதில்லை. ஆனால், புதிய முறையில் பிரதமர் மற்றும் அமைச்சரவை ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள். அத்துடன் அரசியலமைப்பு சபை (Constitutional Council) வலுப்படுத்தப்பட்டு, காவல்துறை, நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியின் தலையீடு இன்றி முழுமையான சுயாதீனத்துடன் இயங்கும். Tag Words: #SajithPremadasa #SriLankaPolitics #ConstitutionalReform #AbolishExecutivePresidency #LKA #SJB #DemocraticRights #OneTextInitiative

Related Posts