சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த வேலணை வீதிகளில் சி.சி.ரி.வி! – Global Tamil News

by ilankai

சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த வேலணை வீதிகளில் சி.சி.ரி.வி! by admin January 22, 2026 written by admin January 22, 2026 வேலணை பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயற்படுகள் கலசார சீரழிவுகளை கட்டுப்படுத்த வேலணையில் நுழைவாயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் (CCTV) கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்படுவதாக தவிசாளர் அறிவித்திருந்தார். அண்மைக் காலமாக வேலணைப் பிரதேசத்தில் சமூகவிரோத செயற்பாடுகளும், சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரித்து வருவதாக பலதரப்பட்டவர்களிடமிருந்தும் சுட்டிக்காட்டப்பட்டு வரும் நிலையில் அதற்கான நடவடிக்கையை எடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தவிசாளர் மேலும் தெரிவித்தார். Related News

Related Posts