யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலின் உலகப் புகழ்பெற்ற பெருமஞ்சத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி (தைப்பூசத் தினம்) நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (ஜனவரி 22, 2026) இணுவில் அறிவாலயத்தில் இடம்பெற்றது. இத்திருவிழாவின் முக்கியத்துவத்தைக் கருதி, இதனை ஒரு தேசிய நிகழ்வாக (National Event) அரசாங்கம் பிரகடனப்படுத்த வேண்டும் என வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் வலியுறுத்தினார். இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் குடிநீர் விநியோகம், சுகாதார வசதிகள் மற்றும் மலசலகூட வசதிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும் வீதித் தடைகளை ஏற்படுத்துதல், வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் மற்றும் திருவிழாக் கால வர்த்தக நிலையங்களை ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக காவல்துறையினருடன் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் மல்லாகம் நீதிமன்றப் பதிவாளர், கலாநிதி ஆறு திருமுருகன், ஆலயக் குருக்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். Tag Words: #InuvilKandaswamy #Perumanjam2026 #Thaipusam #JaffnaFestivals #NationalEvent #HinduCulture #SriLankaNews #SpiritualLegacy
உலகப் பெருமஞ்சத் திருவிழாவை தேசிய நிகழ்வாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் – Global Tamil News
11