இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), இந்திய – இலங்கை பொருளாதார உறவுகள் மற்றும் ‘டிட்வா’ (Ditwah) புயலுக்குப் பிந்தைய மறுசீரமைப்பு குறித்து உரையாற்றியுள்ளாா் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலை ஒரு சவாலாகப் பார்க்காமல், புதிய வாய்ப்புகளுக்கான திருப்புமுனையாகப் பார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கடந்த நவம்பரில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயலின் அழிவை, ஒரு புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பாக வர்ணித்த அவர் . “டிட்வா என்பது பல வழிகளில் ஒரு வாய்ப்பு… இது மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், மூலோபாய ரீதியாக முதலீடு செய்வதற்குமான ஒரு சந்தர்ப்பம்,” என்று குறிப்பிட்டார். புயலால் பாதிக்கப்பட்ட வீதிகள், பாலங்கள், புகையிரத பாதைகள் மற்றும் வீடுகளைச் சீரமைக்க 450 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 350 மில்லியன் டொலர் கடன் உதவி மற்றும் 100 மில்லியன் டாலர் நன்கொடை) கொண்ட ஒரு விசேட உதவித் திட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்தி வருகிறது. பொதுவாக தூதுவர்கள் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைத் தங்கள் நாட்டுக்கு ஈர்ப்பார்கள். ஆனால், இலங்கையில் தனது பணி இதற்கு நேர்மாறானது என்று கூறிய சந்தோஷ் ஜா “இந்தியாவிலிருந்து முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டு வருவதே எனது முக்கிய பணி,” என தெரிவித்தார். இந்தியாவின் அசுர வேகப் பொருளாதார வளர்ச்சியை பட்டியலிட்ட அவர் இந்தியா தற்போது உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது எனவும் ஜூன்-ஒக்டோபர் காலாண்டில் 8.2% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. (IMF கணிப்பான 7.3%-ஐ விட இது அதிகம்) எனவும் சுட்டிக்காட்டினாா். மேலும் தற்போது 4 டிரில்லியன் டொலராக இருக்கும் இந்தியப் பொருளாதாரம், 2030/31-க்குள் 7 டிரில்லியன் டொலரா உயரும். எனவும் இந்தத் தசாப்தம் முடிவதற்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளா்ா.. Tag Words: #IndiaSriLanka #SantoshJha #CycloneDitwah #EconomicRecovery #OperationSagar Bandhu #IndianInvestment #JaffnaNews #LankaEconomy2026 #NeighbourhoodFirst
🤝இலங்கையின் பொருளாதார மீட்சியில் கைகோர்க்கும் “நம்பகமான தோழன் இந்தியா” – Global Tamil News
7