வட லண்டனில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அலெக்ஸாண்ட்ரா பலஸின் (Ally Pally) கூரையில் நடந்து செல்லும் இந்த “தி சமிட்” (The Summit) சாகசத் திட்டம், வரும் பெப்ரவரி 14, 2026 அன்று (காதலர் தினத்தில்) அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் (426 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. அலெக்ஸாண்ட்ரா பலஸ் ஒரு குன்றின் மேல் இருப்பதால், இது பிரித்தானியாவின் மிக உயர்ந்த கூரை நடைபாதை என்ற சிறப்பைப் பெறுகிறது. இந்தக் கூரையின் உச்சியிலிருந்து லண்டன் நகரின் 360 டிகிரி பரந்த காட்சிகளை ரசிக்க முடியும். தெளிவான வானிலை இருக்கும் நாட்களில் சுமார் 25 மைல் தொலைவு வரை உள்ள காட்சிகளைக் காணலாம். இந்தப் பயணத்தின் போது ‘ஏஞ்சல் ஆஃப் பிளெண்டி’ (Angel of Plenty) சிலையை அடையலாம். அங்கிருந்து ஷார்ட் (The Shard), செயின்ட் பால்ஸ் கதீட்ரல் மற்றும் முக்கிய கால்பந்து மைதானங்களை அடையாளம் காணலாம். பகல் நேரக் கிளைம்ப் (Daytime), சூரிய அஸ்தமனக் கிளைம்ப் (Sunset) மற்றும் இரவு நேர மின்விளக்குக் கிளைம்ப் (London Lights) என மூன்று விதமான அனுபவங்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தை Wire & Sky என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இவர்களே டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மைதானத்தின் ‘டேர் ஸ்கைவாக்’ (Dare Skywalk) மற்றும் O2 அரங்கின் ‘அப் அட் தி O2’ (Up at The O2) போன்ற புகழ்பெற்ற சாகசத் திட்டங்களை உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கட்டணமாக பெரியவர்களுக்கு £28 முதலும், சிறுவர்களுக்கு (8-17 வயது) £22 முதலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போது அலெக்ஸாண்ட்ரா பேலஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ‘Golden Tours’ போன்ற தளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். பகல் (Daytime), சூரிய அஸ்தமனம் (Sunset) மற்றும் இரவு நேர (London Lights) கிளைம்ப்கள் எனப் பல தேர்வுகள் உள்ளன. உங்கள் கைபேசியை மேலே கொண்டு செல்ல விரும்பினால், அதற்குத் தனியாக £7.50 செலுத்தி ஒரு பாதுகாப்புப் பையை (Secure Pouch) வாங்க வேண்டும். தனிப்பட்ட கமராக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அங்கு செல்வதற்கு குறைந்தபட்சம் 8 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். (18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு பெரியவருடன் வர வேண்டும். மேலும் குறைந்தபட்ச உயரம் 1.2 மீட்டர் (3 அடி 9 அங்குலம்) இருக்க வேண்டும் என்பதுடன் அதிகபட்ச எடை 130 கிலோ (286 பவுண்ட்) வரை உள்ளவா்கள் மட்டுமே அனுமதி (பாதுகாப்பு கவசத்தின் அளவு காரணமாக) அனுமதிக்கப்படுவா் இதேவேளை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கடந்த 12 மாதங்களுக்குள் பெரிய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இதில் பங்கேற்க முடியாது. மேலும் எபிலெப்சி (வலிப்பு), தலைசுற்றல் (Vertigo) அல்லது இதய நோய் உள்ளவர்கள் இதில் பங்கேற்பது தவிர்க்கப்பட வேண்டும். இன்ஹேலர் அல்லது இன்சுலின் போன்ற அத்தியாவசிய மருந்துகளை வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். கட்டாயமாக மூடிய காலணிகள் (Closed-toe shoes/Trainers) அணிந்திருக்க வேண்டும். ஹை-ஹீல்ஸ் அல்லது செருப்புகளுக்கு அனுமதியில்லை என்பதுடன் வானிலைக்கு ஏற்ற சௌகரியமான உடைகளை அணியுங்கள். குளிர்காலமாக இருப்பதால் கையுறைகள் (Gloves) மற்றும் தொப்பி பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் கிளைம்ப் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே வரவேற்பு அறைக்கு (East Court Entrance) வந்துவிட வேண்டும். அலெக்ஸாண்ட்ரா பலஸ் குன்றின் மேல் இருப்பதால், இது ஒரு சவாலான அதே சமயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். நீங்கள் ஒரு Sunset Climb-ஐத் தேர்ந்தெடுத்தால் லண்டன் நகரின் அழகை அதன் உச்சத்தில் ரசிக்கலாம்! Tag Words: #AlexandraPalace #TheSummit #LondonAdventure #RoofWalk #AllyPally #LondonSkyline #WireAndSky #UKTourism2026 #ValentinesDayLondon
🧗♂️ அலெக்ஸாண்ட்ரா பலஸில் புதிய சாகசப் பயணம்! – Global Tamil News
6