மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி இந்துமயானத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பாதையானது நல்லூர் பிரதேச சபையினால் அண்மையில் செப்பனிடப்பட்டிருந்தது.இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதி எதுவும் இல்லாமல் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நிலத்தோற்றத்தை மாற்றும் வகையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளக்கூடாது என நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.இதனிடையே செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்குள் தேங்கியுள்ள மழை நீரை எதிர்வரும் பெப்ரவரி 9ம் திகதியினுள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நடைபெறும் செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட நீதவான் மற்றும் சட்டவைத்திய அதிகாரி சட்டத்தரணிகள் மற்றும் குற்ற புலனாய்வு திணைக்களத்தினர், சகிதம் இடம்பெற்ற கள ஆய்வில் அத்தகைய முடிவு எட்டப்பட்டுள்ளது.அதேவேளை புதைகுழி அகழ்வுப்பணிகளை மீள ஆரம்பிக்கவென மேலும் 18மில்லியன் நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழி பகுதியில் மாற்றம் வேண்டாம்!
7