இடையில் வெளியேறிய அமைச்சர்கள்!

by ilankai

‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில் இலங்கை அரச அமைச்சர்கள் நிகழ்விலிருந்து இடையில் வெளியேறியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.எனினும் கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றதென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், அமைச்சர் இ.சந்திரசேகர், பங்கெடுத்திருந்தனர்.மேலும், இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை சேர்ந்த  சாய்முரளி, தென்னிந்தியாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர், பிரதமரின் செயலாளர், இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தேசிய தொழில் முயற்சி அதிகார சபை ஆகியவற்றின் தலைவர்கள், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.இந்நிலையில் இந்திய துணைத் தூதரகத்தை சேர்ந்த  சாய்முரளியை தொடர்ந்து, தென்னிந்தியாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் உரையாற்றிக்கொண்டிருக்கையில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், அமைச்சர் இ.சந்திரசேகர் வெளியேறியிருந்தமை முதலீட்டாளர்களிடையே சலசலப்பினை தோற்றுவித்திருந்தது.

Related Posts