முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது – Global Tamil News

by ilankai

கடந்த காலங்களில் நிலவிய கசப்பான அனுபவங்களைச் சுட்டிக்காட்டிய வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தற்போதைய புதிய அரசியல் சூழலில் முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரகாசமான வாய்ப்புகளை விளக்கினார். வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026′ (Northern Investment Summit – NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமானது. மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் வடக்கிற்கு வந்த முதலீட்டாளர்கள் சாதகமற்ற சூழலால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆனால், இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டலில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான மற்றும் வெளிப்படையான சூழல் உருவாகியுள்ளது என உறுதி அளித்தார். இயற்கை வளங்களும், புத்தாக்கத் திறன்களும் இருந்தும் தேசிய மொத்த உற்பத்தியில் (GDP) வடமாகாணம் மிகக் குறைந்த பங்களிப்பையே வழங்கி வந்துள்ளது. இந்த நிலையை மாற்றி, வடக்கை நாட்டின் பொருளாதாரத் தூணாக மாற்ற ‘NIS26’ ஒரு திருப்புமுனையாக அமையும் எனத் தெரிவித்தார். மாகாணத்தின் வளர்ச்சியை முன்னெடுக்க நான்கு துறைகளை அவர் அடையாளப்படுத்தினார். அவை  விவசாயம் மற்றும் கடற்றொழில் (Modern Agriculture & Fisheries), சுற்றுலாத்துறை (Sustainable Tourism), கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் (Education & IT Hub) மற்றும் வலுசக்தி (Renewable Energy) என்பன ஆகும் மேலும் “வளர்ச்சியை வலுவூட்டல், நுண்ணறிவுமிக்க புத்தாக்கங்கள்” என்ற தொனிப்பொருளில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும், மூத்தவர்களின் அனுபவத்தையும் சர்வதேச மூலதனத்துடன் இணைப்பதே இலக்கு எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். Tag Words: #NorthernGovernor #Vethanayahan #NIS26 #InvestInNorth #JaffnaEconomicGrowth #AnuraKumara #SriLankaEconomy2026 #EmpoweringGrowth #InnovationJaffna #northernprosperity

Related Posts