நெடுந்தீவு மக்களின் போக்குவரத்துத் துயருக்கு விடிவு: 'வடதாரகை' மீண்டும் சேவையில் இணைய நடவடிக்கை!...

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்துத் துயருக்கு விடிவு: 'வடதாரகை' மீண்டும் சேவையில் இணைய நடவடிக்கை! 🚢 – Global Tamil News

by ilankai

நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான கடல்வழிப் போக்குவரத்தில் நிலவும் கடும் நெருக்கடிக்கு தீர்வாக, ‘வடதாரகை’ படகை விரைந்து இயக்குவதற்கு கடற்படை உறுதியளித்துள்ளது. நெடுந்தீவு பிரதேச மக்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அண்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் போக்குவரத்து இடர்களைக் களைவது தொடர்பாக, நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு. என். பிரபாகரனுகும், கடற்படையின் வடபிராந்திய கட்டளை தளபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) கடற்படைத் தளத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நெடுந்தீவு சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை, குமுதினி மற்றும் சமுத்திரதேவா ஆகிய மூன்று படகுகளும் ஒரே நேரத்தில் திருத்த வேலைகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சேவையில் ஈடுபட முடியாமல் உள்ளதாக கூட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்களின் அவசரத் தேவையைக் கருத்திற்கொண்டு, திருத்தப்பணிகளில் உள்ள ‘வடதாரகை’ படகை மிக விரைவாக புனரமைத்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதாக கடற்படைத் தளபதி இதன்போது உறுதி அளித்தார். இந்த நடவடிக்கையின் மூலம் நெடுந்தீவு மக்களின் அன்றாடப் போக்குவரத்துப் பாதிப்புகள் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பு.  குறிகாட்டுவான் தூரம்: சுமார் 24 கிலோமீட்டர் (கடல் மைல் கணக்கில் மாறுபடும்). படகுச் சேவைகள் தடைப்படுவதால் கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக அவசர மருத்துவத் தேவைகளுக்கு மக்கள் பெரும் இன்னல்களைச் சந்திக்கின்றனர். #Neduntheevu #DelftIsland #Vadataraikai #Jaffna #SeaTransport #SriLankaNavy #PublicService #PeopleIssue #NorthernProvince #TravelUpdate #நெடுந்தீவு #யாழ்ப்பாணம் #வடதாரகை #கடற்போக்குவரத்து

Related Posts