தென்னாப்பிரிக்காவில் பாடசாலை வாகன விபத்தில்   13 மாணவா்கள் பலி   – Global Tamil News

by ilankai

தென்னாப்பிரிக்காவின்   (Gauteng) மாகாணத்தில், ஜோகன்னஸ்பர்க்கிற்கு தெற்கே உள்ள வாண்டர்பிஜில்பார்க் (Vanderbijlpark) என்ற இடத்தில் நேற்று (ஜனவரி 19, 2026) காலை இடம்பெற்ற விபத்தில் 13 மாணவர்கள் உயிாிழந்துள்ளனா். காலை சுமார் 7:00 மணியளவில் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் மினிபஸ் (Scholar transport) மற்றும் ஒரு பெரிய ட்ரக் (Side-tipper truck) ஆகியவை நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திலேயே 11 மாணவர்கள் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மினிபஸ் ஓட்டுநர் பிற வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ட்ரக் மீது மோதி யதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா (Cyril Ramaphosa) இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். “குழந்தைகளே ஒரு தேசத்தின் விலைமதிப்பற்ற சொத்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ள அவர், சாலைப் பாதுகாப்பு விதிகளை அனைவரும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். Tag Words: #SouthAfrica #Vanderbijlpark #SchoolBusAccident #GautengNews #RoadSafety #Ramaphosa #CrimeAlert2026 #RestInPeace

Related Posts