திருமலை புத்தர் சிலை: ரிட் மனு!

by ilankai

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.ரிட் மனுவை பரிசீலனைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது.பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.பலாங்கொட வனவாசி காசியப்ப தேரர் உட்பட நான்கு தேரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், முன்னதாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்   விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts