வடமாகாணக் கல்வி நிர்வாகத்தில் அரசியல் உயர்மட்டங்களின் தலையீடுகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், கல்வித்துறை சுயாதீனமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்கள் போன்ற உயர்பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிக்காமல், அரசியல்வாதிகள் தமக்கு விருப்பமானவர்களை நியமிக்கும் போக்கு வடமாகாணத்தில் காணப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தினர். கல்வித்துறை என்பது எவ்வித அரசியல் அழுத்தங்களும் இன்றி தன்னிச்சையாகவும், நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளாலும் வழிநடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரினர். அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய கல்வி மாற்றக் கொள்கையை வரவேற்பதாகத் தெரிவித்த சங்கத்தினர், ஆனால் அது குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் தெளிவின்மை நிலவுவதாகச் சுட்டிக்காட்டினர். மேலும் புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், அது குறித்த முழுமையான விழிப்புணர்வையும் விளக்கத்தையும் கல்விச் சமூகத்திற்கு அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும்அவர்கள் வலியுறுத்தினர். Tag Words: #JaffnaNews #EducationSriLanka #TeachersUnion #NorthernProvince #EducationReform2026 #NoPoliticsInSchool #MothersTongueTeachers #SriLankaPolitics
🎓 “கல்வியில் அரசியல் வேண்டாம்” – இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் – Global Tamil News
9