இலங்கையின் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.விவாதத்துக்கு எதிர்க்கட்சி தயாராக இல்லை எனில், கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் அல்ல, எதிர்க்கட்சியே எடுக்க வேண்டும். அரசாங்கம் கூறுவது போல் எதிர்க்கட்சி அதை விவாதிக்கத் தயாராக இல்லை.” என தெரிவித்துள்ளார்;.கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தரம் 06 கல்வி முறை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஹரிணி விவகாரம்:அடங்கிய எதிர்கட்சிகள்!
7
previous post