“எனது சகோதரரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருமான மேதகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (@MohamedBinZayed) அவர்களை புது தில்லி விமான நிலையத்தில் வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி.” “அவரது இந்த வருகை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான ஆழமான மற்றும் வலுவான நட்புறவை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ‘உத்திபூர்வ கூட்டாண்மை’ (Comprehensive Strategic Partnership) ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.” என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 📍 இன்றைய சந்திப்பின் சிறப்பம்சங்களாக, இருதரப்பு வர்த்தகத்தை 2032-ஆம் ஆண்டிற்குள் 200 பில்லியன் டொலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி (LNG), பாதுகாப்புத் துறை மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் MSME நிறுவனங்களை இணைப்பதற்கான முக்கிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. தமது ஆலோசனைகள் இரு நாட்டு மக்களுக்கும் பெரும் நன்மைகளைத் தரும் என தான் உறுதியாக நம்புவதாக இந்தியப் பிரதமர் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்! #IndiaUAEFriendship #Brotherhood #StrongerTogether #StrategicPartnership #NarendraModi #MBZInIndia #GlobalGrowth #IndiaUAE இது அமீரக அதிபரின் 10 ஆண்டுகளில் 5-வது இந்திய பயணமாகும். இந்தியாவின் ‘டிஜிலாக்கர்’ வசதியை அமீரகத்துடன் இணைப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
🤝 இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம்: ஒரு புதிய சகாப்தம்! 🇮🇳🤝🇦🇪 – Global Tamil News
8