நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம், ஒரு குறிப்பிட்ட கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா அல்லது அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்து கையூட்டல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நாடாளுமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விளக்கம் கோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்களின் மாதாந்த கொடுப்பனவுகள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும், இது ஊழல் என்றும் அவர் தனது முறைப்பாட்டில் கூறியிருந்தார். கம்மன்பில கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி இந்த முறைப்பாட்டைச் செய்திருந்தார். தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆணைக்குழுவிடம் பதில் கோருவதாக கம்மன்பில தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.அதற்கமைய கையூட்டல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நாடாளுமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் எங்கே போகிறது ?
5
previous post