🚨 யாழில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது! – Global Tamil News

by ilankai

🚨 யாழில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது! யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். 📌 நெல்லியடி பகுதியில் உள்ள ஒரு அடர்ந்த பற்றைக்காட்டு பகுதியில் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். தப்பியோடிய ஏனையோரை காவற்துறையினர் தேடி வருகின்றனர். இதன்போது 50 லீட்டர் கசிப்பு, 780 லீட்டர் கோடா (Goda), கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. 🔍 பற்றைக்காட்டின் மத்தியில் இரகசியமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக காவற்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. பொலிஸாரைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்ற போதிலும், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவற்துறையினர்  முன்னெடுத்து வருவதுடன், தப்பியோடியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. #Jaffna #Nelliyady #PoliceRaid #IllegalAlcohol #CrimeNews #NorthernProvince #SriLanka #யாழ்ப்பாணம் #நெல்லியடி #பொலிஸ்முற்றுகை #செய்திகள்

Related Posts