லஞ்ச ஊழல்:விழாவிற்கு வருகை தராத அமைச்சர்கள்!

by ilankai

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மீது தேசிய மக்கள் சக்தியின் வடக்கு தலைவர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்ற நிலையில் ; வடமாகாண தைப்பொங்கல் விழாவை கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.நிகழ்வு மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை நடைபெற்றது.வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் விருந்தினர்களாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் அழைக்கப்பட்டதோடு, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.எனினும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர்,கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.ஏற்கனவே இடமாற்றங்களிற்கு லஞ்சம் பெற்றதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மீது வவுனியாவில் குற்றச்சாட்டுக்கள் தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts