யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் இன்று காரில் வடமராட்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். கார் வல்லைப் பகுதியை எட்டியபோது, திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. விபத்தில் பலத்த காயமடைந்த மூவரையும் அவ்விடத்தில் இருந்த பொது மக்கள் உடனடியாக மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த அச்சுவேலி காவற்துறையினர், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ________________________________________ விழிப்புணர்வு குறிப்பு: மழைக்காலங்களிலும், வழுக்கல் நிறைந்த வல்லை போன்ற வீதிகளிலும் பயணிக்கும் போது வேகத்தைக் கட்டுப்படுத்தி அவதானமாகச் செல்லுமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Posts