🚨 கிரீன்லாந்தை வாங்க ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிக்கும் ட்ரம்ப்! – Global Tamil News

by ilankai

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை (Tariffs) அறிவித்துள்ளார். அதன்படி டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் மீது 10% ஆரம்ப வரி விதிக்கப்படும். இந்த 10% வரி பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஜூன் 1-ம் தேதி முதல் இந்த வரி விகிதம் 25% ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் சுயாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவிடம் விற்பனை செய்யும் உடன்படிக்கை எட்டப்படும் வரை இந்த வரிகள் அமுலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ள  டிரம்ப்  “டென்மார்க் திருப்பித் தர வேண்டிய நேரம் இது” என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து மிக முக்கியமானது என்றும், அங்குள்ள இயற்கை வளங்கள் மற்றும் மூலோபாய இருப்பிடத்தை அமெரிக்கா கையகப்படுத்த விரும்புவதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இருப்பினும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து நிர்வாகம் “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்பதில் உறுதியாக உள்ளன. இந்த வரி விதிப்பு சர்வதேச வர்த்தகம் மற்றும் ஐரோப்பிய-அமெரிக்க உறவுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Greenland #DonaldTrump #USA #Denmark #Tariffs #BreakingNews #InternationalTrade #Economy #GlobalPolitics #USNews #TamilNews

Related Posts