🚨 அதிரடி அறிவிப்பு: அமெரிக்காவின் டெக்சாஸில் மாபெரும் எரிசக்தி வேட்டை! 🛢️ – Global Tamil News

by ilankai

🚨 அதிரடி அறிவிப்பு: அமெரிக்காவின் டெக்சாஸில் மாபெரும் எரிசக்தி வேட்டை! 🛢️ எரிசக்தி உலகில் ஒரு மிகப்பெரிய திருப்பம்! அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகப்படியான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன. சுமார் 1.6 பில்லியன் பேரல்கள் (1.6 Billion Barrels). கச்சா எண்ணெய்: 28 டிரில்லியன் கன அடிக்கும் அதிகமான இயற்கை எரிவாயு: இருப்பு (28+ Trillion Cubic Feet).  என்பவற்றை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS). கண்டறிந்துள்ளது. இவை டெக்சாஸின் பெர்மியன் பேசின் (Permian Basin) பகுதியில் உள்ள உட்ஃபோர்ட் மற்றும் பார்னெட் ஷேல் (Woodford & Barnett Shales) படிமங்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த எரிவாயு இருப்பு, ஒட்டுமொத்த அமெரிக்காவின் 10 மாதத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியது. சுமார் 20,000 அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்தப் படிமங்களை, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தற்போது பிரித்தெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது உலக எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 🌎 இயற்கை வளங்களின் இருப்பிடமாகத் திகழும் டெக்சாஸ், மீண்டும் ஒருமுறை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது! ✨ குறிப்பு. கண்டறியப்பட்ட பகுதி – உட்ஃபோர்ட் (Woodford) மற்றும் பார்னெட் (Barnett) ஷேல்ஸ் எண்ணெய் அளவு  – 1.6 பில்லியன் பேரல்கள் (10 வார அமெரிக்கத் தேவைக்குச் சமம்) எரிவாயு அளவு –     28.3 டிரில்லியன் கன அடி (10 மாத அமெரிக்கத் தேவைக்குச் சமம்) ஆழம் நிலப்பரப்பிலிருந்து சுமார் 18,000 முதல் 20,000 அடிகள் இவை இதுவரை     இதுவரை கண்டறியப்படாத “Technically Recoverable” வளங்கள் என றெிவிக்கப்பட்டுள்ளது. #TexasOil #EnergyDiscovery #USGS #OilAndGas #PermianBasin #BreakingNews #EnergyIndependence #TamilNews #TexasEnergy #கச்சாஎண்ணெய் #டெக்சாஸ்

Related Posts