ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் உறவு: ஜனாதிபதி புபுட்டின் அதிரடி அறிவிப்பு! ஐரோப்பிய நாடுகளுடன் தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். எந்தவிதமான எதிர்பார்ப்புகளுமின்றி, அனைத்து ஐரோப்பிய நாடுகளுடனும் சுமுகமான உறவை வளர்த்தெடுக்க ரஷ்யா விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாஸ்கோவில் உள்ள கிரெம்ளினில் நடைபெற்ற புதிய வெளிநாட்டு தூதர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கும் விழாவில் புதின் இதனைத் தெரிவித்தார். தேசிய நலன்களை மதித்தல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உறவு அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஐரோப்பிய நாடுகளுடன் ரஷ்யாவிற்கு ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியான பிணைப்பு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். உக்ரைன் போருக்குப் பிந்தைய பதற்றமான சூழலில், ஐரோப்பாவுடனான பொருளாதார மற்றும் தூதரக ரீதியான தொடர்புகளை மீண்டும் சீரமைக்க விரும்புவதாக புதின் விடுத்திருக்கும் இந்த அழைப்பு சர்வதேச அரசியலில் முக்கியத்துவமானதாகப் பார்க்கப்படுகிறது. ________________________________________ சுமார் 33 நாடுகளின் தூதர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். சர்வதேச ஒத்துழைப்பு என்பது உலகின் நிலையான வளர்ச்சிக்கு இன்றியமையாதது என புதின் தனது உரையில் குறிப்பிட்டார். அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுடனும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா எப்போதும் திறந்த மனதுடன் இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.
ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் உறவு: ஜனாதிபதி புபுட்டின் அதிரடி அறிவிப்பு! – Global Tamil News
6