இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்: மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக...

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்: மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக அச்சம்! – Global Tamil News

by ilankai

by admin January 17, 2026 written by admin January 17, 2026 இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்: மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக அச்சம்! இந்தோனேசியா: ஜாவா தீவின் யோக்யகர்த்தா நகரில் இருந்து தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு இன்று மதியம் 11 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று மாயமாகியுள்ளது. யோக்யகர்த்தா நகரில் இருந்து தெற்கு சுலவாசி நோக்கி விமானம் சென்றது. தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் (Maros) நகர் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் மலைப்பாங்கான பகுதியில் பறந்தபோது இந்த தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி, முற்றிலும் தீப்பற்றி எரிந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் விமானத்தில் பயணித்த 11 பேரும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த மலைப்பகுதிகளில் மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. Related News

Related Posts