கொழும்பு 13, ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று இரவு (16.01.2026) அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குடும்பத்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரு சிறு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு ஜிந்துப்பிட்டி பகுதியில் இனந்தெரியாத நபர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர். இவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதலில் 4 வயது சிறுவன் மற்றும் 3 வயது சிறுமி ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே (LRH) சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பில் கடலோர காவல் பிரிவினரும், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்களைக் கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. #Jinthupitiya #ShootingIncident #ColomboCrime #SriLankaNews #BreakingNews #PoliceInvestigation #CrimeAlert #Colombo13 #SriLankaPolice #ஜிந்துப்பிட்டி #துப்பாக்கிச்சூடு #கொழும்பு
🚨 அதிர்ச்சிச் சம்பவம்: ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, இரு சிறுவர்கள் படுகாயம்! 🚨 – Global Tamil News
2