மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராக விசேட கலந்துரையாடல்! 📢🛑 –...

மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராக விசேட கலந்துரையாடல்! 📢🛑 – Global Tamil News

by ilankai

மன்னாரில் இன்று சனிக்கிழமை (17) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் (PSTA) தொடர்பான ஆபத்துக்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த விசேட தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.  குறித்த கலந்துரையாடல்  இன்று சனிக்கிழமை (17)  வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில்   மாவட்ட இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில்  இடம்பெற்றது. தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு (PTA) மாற்றீடாகக் கொண்டு வரப்படவுள்ள இந்த புதிய சட்டமூலம் (PSTA), நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், அதில் உள்ள கடுமையான பிரிவுகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டது: குறிப்பாக பொதுமக்களின் போராட்டங்கள் மற்றும் சிவில் சமூகச் செயல்பாடுகளைக் குறிவைக்க வாய்ப்புள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கை குடிமக்களும் இச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படலாம். சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்பவர்கள் கூட இச்சட்டத்தால் பாதிக்கப்படக்கூடும். பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் மிகவும் பரந்து காணப்படுவதால், இது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் என்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்தக் கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.  இந்தச் சட்டம் நாட்டிற்குத் தேவையற்றது என்றும், இதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கலந்துகொண்டவர்கள் ஏகமனதாகத் தெரிவித்தனர். #Mannar #PSTA #HumanRights #SriLanka #CivilRights #RepealPTA #NoToPSTA #Democracy #NorthEastCivilCommittee #FreedomOfSpeech #மன்னார் #மனிதஉரிமை #பயங்கரவாதஎதிர்ப்புச்சட்டம்

Related Posts