கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு, இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.குறித்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், 4 வயது சிறுவன் மற்றும் 3 வயது சிறுமி காயமடைந்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.குறித்த சிறுவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மருத்துவக் குழுவினர் தேவையான சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இந்த துப்பாக்கிச் சூடு ஜிந்துப்பிட்டி 125 வத்தை பகுதியில் இடம்பெற்றதாகவும், முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – இரு குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம்
1