தையிட்டி பேச மாட்டார், அரசியல் தீர்வு பேச மாட்டார்!பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் பேச மாட்டார்! ஆனால் நீ நடந்தால் நடை அழகு என பொதுவெளியில் அனுரவின் யாழ்ப்பாண பயணத்தை முன்வைத்து சமூக ஊடக பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.இப்போது யாழில் அனுரவிற்கு பின்னால் இருக்கும் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் யார் என பார்த்தால் கடந்தகாலங்களில் ஆளும் அரசாங்கத்தின் உறுப்பினர்களாக இருந்த டக்ளஸ், அங்கஜன் போன்றோரின் பின்னால் நின்ற படித்தவர்கள் என்று அறியப்படும் ஒரு கூட்டம் தான் என்கிறன சுயாதீன தரப்புக்கள்..அவர்கள் எப்பொழுதும் நாட்டை ஆளும் ஜனாதிபதியின் கட்சியை ஆதரிக்கும் கொள்கை கொண்ட கூட்டம் என்பது தெரியாத ஒன்றல்ல. ஜனாதிபதி தேர்தலில் திசைகாட்டிக்கு யாழில் கிடைத்த வாக்குகள் வெறும் 25000 க்கும் குறைவு,ஆனால் அனுர சிங்கள மக்களின் வாக்குகளால் நாட்டின் ஜனாதிபதியாகி இரண்டு மாதத்தினுள் நடந்த பொது தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் திசைகாட்டிக்கு அளித்த வாக்குகள் 81ஆயிரமாகும்.ஒருவேளை 2024ல் ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தால் டக்ளஸ்,அங்கஜன், விஜயகலா போன்றவர்கள் இன்று அமைச்சர்களாகவும், முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்திருப்பார்கள்.ஆனால்; கடந்த காலங்களில் அனுராவின் கூட்டத்திற்கு யாழ் மக்களை பெரூந்து மூலம் கட்டாயப்படுத்தி யாரும் ஏற்றியதில்லை,ஆனால் இந்த முறை நடந்ததை பார்க்கும் போது அனுர அலை யாழில் அடங்கிவருவது தெளிவாக தெரிகிறதெனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அலை தணிகின்றதா?
0