யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்களை ஊர்காவற்துறை காவற்தறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். 📌 வேலணை பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. சந்தேகநபர்களைக் கைது செய்து சோதனையிட்டபோது, அவர்களிடமிருந்து ஹெரோயின்: 2 கிராம் 350 மில்லி கிராம் ஐஸ் (ICE): 12 கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன: 🔍 கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணையின் போது, தமக்கு நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த ஒருவரே இந்த போதைப்பொருட்களை விநியோகிப்பதாகத் தெரிவித்துள்ளனர். ⚖️ தகவல் வழங்கிய முக்கிய போதைப்பொருள் விநியோகஸ்தரைக் கைது செய்ய காவற்துறையினர் ர் வலைவீசியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போதைப்பொருளைக் கொள்வனவு செய்யும் நபர்கள் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு என்றும் அவசியமானது. #Jaffna #DrugBust #PoliceAction #Velanai #Heroin #IceDrug #KaytsPolice #NorthernProvince #SriLankaNews #DrugFreeSociety #CrimeNews #யாழ்ப்பாணம் #போதைப்பொருள் #கைது #ஊர்காவற்துறை
🚨 யாழ்ப்பாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை: இரு இளைஞர்கள் கைது! – Global Tamil News
8