யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால் , வீடொன்று பகுதிகளவில் தீயில் எரிந்துள்ளது அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து விட்டு , வெளியே சென்றுள்ளனர். குப்பையில் பற்றிய தீ அருகில் வீட்டின் கூரையில் பற்றி வீடு தீப்பற்றியுள்ளது. இதனை அவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர். குறித்த சம்பவத்தில் வீட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்துள்ளது. பொதுமக்களுக்கான எச்சரிக்கை! கோடை காலம் அல்லது காற்று வீசும் நேரங்களில் குப்பைகளுக்குத் தீ வைக்கும்போது மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். குப்பைகளை எரிக்கும்போது அருகே நீர் இருப்பதை உறுதி செய்யுங்கள். தீ முழுமையாக அணைந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்தாமல் அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம். வீடுகள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு அருகில் குப்பைகளை எரிக்காதீர்கள்.
யாழில். குப்பைக்கு வைத்த தீ வீட்டை காவுகொண்டது! – Global Tamil News
8