யாழ்ப்பாணத்தில் 'தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை' அநுர ஆரம்பித்து வைத்தார்!...

யாழ்ப்பாணத்தில் 'தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை' அநுர ஆரம்பித்து வைத்தார்! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ அநுர ஆரம்பித்து வைத்தார்! ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், குறித்த பயனாளியின் குடும்பத்தாரால் நடுகை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், பயனாளிகளுக்கான வீட்டு மானியக் காசோலைகள் மாண்புமிகு ஜனாதிபதி முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது. நீண்டகாலமாக தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், அவர்களுக்குப் பாதுகாப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கிலும் இவ்வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிகழ்வில், மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வீடமைப்பு அமைச்சர் கலாநிதி எச்.எம்.சுசில் ரணசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, வடமாகாண ஆளுநர் ந. வேதநாயகன் , யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர். #AnuraKumaraDissanayake #AKD #ThaiPongal2026 #Jaffna #Velanai #NationalUnity #SriLanka #PresidentOfSriLanka #PeaceAndHarmony #தைப்பொங்கல் #யாழ்ப்பாணம் #அநுரகுமாரதிஸ்ஸநாயக்க #தேசியஒருமைப்பாடு 

Related Posts