நாக விகாரை விகாரதிபதியின் காலில் விழுந்து ஆசி பெற்றார் ஜனாதிபதி! – Global Tamil News

by ilankai

நாக விகாரை விகாரதிபதியின் காலில் விழுந்து ஆசி பெற்றார் ஜனாதிபதி! தையிட்டி விகாரை பற்றி பேசியிருப்பார்களோ? by admin January 16, 2026 written by admin January 16, 2026 யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் , இன்றைய தினம் ஜனாதிபதி விகாரதிபதியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அதேவேளை, தையிட்டி விகாரை பொறுப்பை தன்னிடம் தந்தால், விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் தனியார் காணிகளுக்கு மாற்றீடாக, தையிட்டி விகாரைக்கு சொந்தமான காணிகளில் மாற்று காணிகளை வழங்கி தையிட்டி விகாரை பிரச்னைக்கு தீர்வு வழங்க தயார் என அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்துடன், தையிட்டி பகுதிக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை நேரில் சந்தித்தும் நயினாதீவு விகாராதிபதி கருத்துக்களை தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts