டிப்பர் விபத்து – இருவர் உயிரிழப்பு! – Global Tamil News

by ilankai

கிளிநொச்சி பகுதியில் இருந்து, அனுமதிபத்திரமின்றி யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நாவற்குழி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு மிக வேகமாக டிப்பர் வாகனத்தை செலுத்தி வந்த நிலையில்,  வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக காவற்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts