பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஈரானில் மக்கள் பல வாரங்களாக வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஆட்சியாளர்கள் கொடூரமான முறையில் போராட்டக்காரர்களைக் கொன்று குவிக்கிறார்கள். 3428 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈரானின் புரட்கரக ஆயுதப்படைகளின் துப்பாக்கிக்கு இரையாகிக் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் 1979 ஆண்டு விரட்டப்பட்ட கடைசி மன்னர் ஷாவின் மகன் ஆட்சியை வீழ்த்த அழைப்பு விடுக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போது ஆட்சியை அச்சுறுத்துகிறார். இந்நிலையில் அப்பகுதியில் போர்ப் பதற்றங்கள் எழுந்துள்ளன. மத்திய கிழக்கில் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாககூடிய இராணுவத் தளங்களிலிருந்து பணியாளர்களையும் விமானங்களை அமெரிக்கா வேறு இடங்களுக்கு நகர்த்துகிறது.இந்நிலையில் பாரசீக வளைகுடாவிற்கு அமெரிக்கா விமானம் தாங்கி கப்பலை அனுப்புகிறது. தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கனையும் அதன் துணைக் குழுவையும் பென்டகன் உத்தரவிட்டுள்ளது. இக்கப்பல் இப்பகுதியை வந்தடைய இரண்டு நாட்கள் எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.பாரசீக வளைகுடாவிற்கு விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா.தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கனையும் அதன் துணைக் குழுவையும் பென்டகன் உத்தரவிட்டுள்ளது. கேரியர் ஸ்ட்ரைக் குரூப் (CSG) இந்தப் பிராந்தியத்திற்கு வர இரண்டு நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது .மேலும், சவுதி அரேபியா, குவைத் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்கர்களை இராணுவ நிறுவல்களிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் நேற்று முழுவதும் வான்வெளி மூடப்பட்ட பின்னர் தற்போது விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.ஈரானின் வான்வெளி மூடப்பட்டபோது இரண்டு அடையாளம் தெரியாத சரக்கு விமானங்கள் ஆயுதங்களுடன் இறக்கியதாக சந்தேகம் வெளியாகியுள்ளது. இது சீனாவினுடைய விமானங்காக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.ஈரானிய ரியால் மதிப்பு தற்போது அமெரிக்க டாலருக்கு 1.4 மில்லியனுக்கும் அதிகமாக சரிந்ததைத் தொடர்ந்து டிசம்பர் 28 அன்று ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. அணுசக்தி திட்டம் உள்ளிட்ட பலவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளால் ஈரானின் பொருளாதாரம் தவித்து வருகிறது. போராட்டங்கள் தீவிரமடைந்து, ஈரானில் உள்ள இறையாட்சிக்கு நேரடியாக சவால் விடுத்தன.ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் டிசம்பர் 28, 2025 அன்று தொடங்கின.ஈரானிய ரியால் சரிந்ததைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கினர், இது இப்போது அமெரிக்க டாலருக்கு 1.4 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள தடைகளால், ஈரானின் பொருளாதாரம் திணறி வருகிறது.போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெஹ்ரானை எச்சரித்துள்ளார்.அமெரிக்கா தலையிட்டால் பழிவாங்குவோம் என்று ஈரான் மிரட்டுகிறது.அதிகரித்து வரும் உயிரிழப்புகள் மற்றும் பாதுகாப்பு எந்திரத்தின் அதிகப்படியான அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், வெகுஜன போராட்டங்கள் தொடர்கின்றன.இதுவரை 3400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாரசீக வளைகுடாவிற்கு அமெரிக்கா விமானம் தாங்கி கப்பலை அனுப்புகிறது
2
previous post