யாழ்ப்பாணம், வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க அவர்கள் கலந்துகொண்டார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவில் யாழ். மக்களுடன் இணைந்து கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி இதன்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் உரையில் பல இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 🗣️ குறிப்பாக தேசிய ஒருமைப்பாடு – “எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே தமது இலக்கு.” எனக் குறிப்பிட்டுள்ளார் இனவாதமற்ற சமூகத்துடனான பாகுபாடுகளற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும், கலாசார மதிப்பை பேண “ஒரு நாடு அழகாக இருக்கவும், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் ஒவ்வொரு சமூகத்தின் கலாசாரத்தையும் மதித்து ஏற்றுக்கொள்வது அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தி உள்ளார். பொதுமக்களின் உற்சாகமான வரவேற்புடன் நடைபெற்ற இவ்விழா, வடக்கு மற்றும் தெற்கு மக்களிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமையும் என எதிர்பாரக்கப்படுகிறது. #Hashtags: #AnuraKumaraDissanayake #AKD #ThaiPongal2026 #Jaffna #Velanai #NationalUnity #SriLanka #PresidentOfSriLanka #PeaceAndHarmony #தைப்பொங்கல் #யாழ்ப்பாணம் #அநுரகுமாரதிஸ்ஸநாயக்க #தேசியஒருமைப்பாடு
🌾 தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க பங்கேற்பு! ✨ – Global Tamil News
6