அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இணைந்ததற்காக கைது செய்யப்பட்ட ஈரானிய எதிர்ப்பாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதில் இருந்து ஈரான் பின்வாங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை சுட்டிக்காட்டினார். அவரது வழக்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.ஈரானில் கொலைகள் நின்று வருவதாகவும், மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான எந்த திட்டமும் இல்லை என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, என்று டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் இருந்து கூறினார்.மீண்டும் அமெரிக்கா-ஈரான் மோதல் ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், கத்தாரில் உள்ள ஒரு விமானப்படை தளத்திலிருந்து அமெரிக்கா சில பணியாளர்களை திரும்பப் பெறத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பின்னர் டிரம்பின் இக்கருத்து வெளிவந்துள்ளது.நெருக்கடி எவ்வாறு உருவாகிறது என்பதைக் கவனிப்பதாகவும் கூறினார். இருப்பினும் அமெரிக்காவின் சாத்தியமான இராணுவ நடவடிக்கையை அவர் நிராகரிக்கவில்லை.
ஈரானில் கொலைகள் நிறுத்தப்பட்டுள்ளன என டிரம்ப் கூறுகிறார்
7