தேசிய மக்கள் சக்தி உள்வீட்டு மோதல்கள் உச்சமடைந்துள்ள நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை ஓரங்கட்ட முற்பட்டுள்ளமை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.ஹரிணி முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை காரணமாகக் கொண்டு, அவர் தற்போது கடும் விமர்சனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் உள்ளாகி வருகிறார்.எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கல்வித் துறையில் செயல்படும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்புகளும் அவருக்கு எதிராக தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.இந்நிலையில் ஜே.வி.பி. கட்சி, ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், பிமல் ரத்நாயக்கவை புதிய பிரதமராக நியமிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.எனினும் பிரதமர் கதிரையில் பிமல் ரத்நாயக்க அமரவைக்கப்பட்டாலும் கல்வி சீர்த்திருத்தங்கள் 2027ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கல்வி அமைச்சர் பதவியில் ஹரிணி அமரசூரிய தொடர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஏனைய தரப்புக்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளன.
ஹரிணி அமரசூரிய:பிரதமர் கதிரையிலில்லை!
3
previous post