கடற்படையிடம் இருந்து பூர்வீக காணியை மீட்டு தாருங்கள்! 30 வருடங்களுக்கு மேலாக எழுவை தீவில் போராடும் ஒரு தாய் by admin January 14, 2026 written by admin January 14, 2026 எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன். எனவே எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது எமது காணியை எம்மிடமே ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாயார் ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். எழுவைதீவு பகுதியில் கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள தனியார் காணியை நிரந்தரமாக சுவீகரிக்க கடற்படையினர் முயற்சித்து வரும் நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் கடற்படையினருக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகளில் ஒரு காணியின் உரிமையாளரான தாயார் ஒருவரே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், எமது பூர்வீக காணியை கடந்த 1990 ஆம் ஆண்டுகளின் பின்னர் கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி முகாம் அமைத்துள்ளனர். அந்த காணியில் அக்கால பகுதியிலேயே சிறிய வீடு ஒன்றை நாம் கட்டி வாழ்ந்து வந்த நிலையில், கடற்படையினர் அக்காணியை கையகப்படுத்தி முகாம் அமைத்துள்ளனர். அந்நிலையில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எமது காணியை மீள கையளிக்குமாறு கடற்படையினரிடம் கோரி வருகிறோம். பல அரச தரப்பினரையும் கோரியுள்ளோம். எதற்கும் பயனில்லை.
கடற்படையிடம் இருந்து பூர்வீக காணியை மீட்டு தாருங்கள்! – Global Tamil News
10