அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இருந்து வந்த அனைத்து நேரடி இராஜதந்திர தொடர்புகளும் அதிகாரப்பூர்வமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி முடிவினால் சர்வதேச அரசியலில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இடையிலான திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு வன்முறையைக் கையாண்டால், அமெரிக்கா “மிகக் கடுமையான நடவடிக்கை” எடுக்கும் என ஏற்கனவே ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததே இதற்கு முக்கிய காரணம். “உதவி வரப்போகிறது” (Help is on the way) என டிரம்ப் பதிவிட்டது, ஈரானின் இறையாண்மையை மீறும் செயல் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் (Al Udeid Air Base) இருந்து சில பணியாளர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானின் அணுசக்தி விவகாரம் மற்றும் பிராந்திய அமைதி குறித்த பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் பதற்றம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா ஏற்கனவே ஈரான் மீது 25% வரி விதிப்பு மற்றும் பயணத் தடைகளை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்களுக்கு எமது பக்கத்தை பின்தொடரவும்!
அமெரிக்கா – ஈரான் இடையிலான இராஜதந்திர உறவுகள் முற்றாக துண்டிப்பு! – Global Tamil News
4