தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால், வியாபார நடவடிக்கைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் வைப்பதற்குத் தேவையான விதவிதமான அளவுகளில் மண்பானைகள் மற்றும் அடுப்புகள் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மற்றும் பொங்கல் பண்டிகையின் அடையாளமான கரும்புகள் மற்றும் மஞ்சள், இஞ்சிக் கொத்துக்கள் சந்தையின் ஓரங்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு விற்பனையாகின்றன. வீடுகளை அலங்கரிக்கத் தேவையான மாவிலை, தோரணங்கள் மற்றும் கதம்பப் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் வகையில் விற்பனை நடைபெறுகிறது. பொங்கல் படையலுக்கான காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட சற்று உயர்ந்து காணப்பட்டாலும், பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் மக்கள் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். Tag Words: #ThaiPongal2026 #ThirunelveliMarket #JaffnaPongal #TraditionalFestival #SriLankaEvents #PongalShopping #SugarCane #TamilCulture
🌾 திருநெல்வேலிச் சந்தையில் களைகட்டிய பொங்கல் வியாபாரம் – Global Tamil News
1