7
யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகம் ஒன்று அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். தாவடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் அமைத்துள்ள இரண்டு கடை தொகுதிக்குமே இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளை தீ வைக்கப்பட்டுள்ளது. இரு நபர்கள் கதவுக்கு தீ மூட்டி விட்டு தப்பி செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. பூட்டப்பட்டிருந்த இரும்பு கதவுகளுக்கே தீ வைக்கப்பட்டமையால், பெரியளவிலான சேதங்கள் ஏற்படவில்லை. குறித்த கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான அருண் சித்தார்த் என்பவர் கட்சி அலுவலகத்தை நடாத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.