ஈரானில் நிலவி வரும் தீவிர உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, அங்கு தங்கியிருக்கும் தங்களது நாட்டுப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகள் அவசர அழைப்பு விடுத்துள்ளன. கடந்த டிசம்பர் இறுதியில் பொருளாதார நெருக்கடியால் தொடங்கிய போராட்டங்கள், தற்போது நாடு தழுவிய அளவில் தீவிரமடைந்துள்ளன. ஈரான் பாதுகாப்புப் படைகளின் கடுமையான ஒடுக்குமுறையால் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகள்: 1. அமெரிக்கா (USA) 2. கனடா (Canada) 3. பிரான்ஸ் (France) 4. ஐக்கிய இராச்சியம் (UK) 5. ஜெர்மனி (Germany) 6. ஜப்பான் (Japan) 7. சீனா (China) 8. நியூசிலாந்து (New Zealand) 9. அயர்லாந்து (Ireland) 10. தைவான் (Taiwan) 11. சிங்கப்பூர் (Singapore) பெரும்பாலான சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பாதுகாப்பான சூழல் இருந்தால் தரைவழியாக (ஆர்மீனியா அல்லது துருக்கி வழியாக) வெளியேற ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஈரானில் நிலவும் இணைய முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகளால், அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் நேரடி உதவிகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டுப் பிரஜைகள் தன்னிச்சையாகக் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானில் வசிக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாராவது இருந்தால் இந்தத் தகவலை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
முக்கிய அறிவிப்பு: ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு 11 நாடுகள் அறிவுறுத்தல்! – Global Tamil News
1