“ட்ரம்ப் ஒரு பாலியல் குற்றவாளி; உலகின் மிக மோசமான மனிதர்!” – விருது...

“ட்ரம்ப் ஒரு பாலியல் குற்றவாளி; உலகின் மிக மோசமான மனிதர்!” – விருது மேடையில் ஹொலிவூட் நடிகர் மார்க் ருப்பலோ! – Global Tamil News

by ilankai

“ட்ரம்ப் ஒரு பாலியல் குற்றவாளி; உலகின் மிக மோசமான மனிதர்!” – விருது மேடையில் ஹொலிவூட் நடிகர் மார்க் ருப்பலோ! by admin January 14, 2026 written by admin January 14, 2026 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஹொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகர் மார்க் ருப்பலோ (Mark Ruffalo) மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அண்மையில் நடைபெற்ற கோல்டன் குளோப் (Golden Globe) விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோதே அவர் இந்த அதிரடி கருத்துக்களை முன்வைத்தார். விருது மேடையில் பேசிய மார்க் ருப்பலோ, ட்ரம்ப் குறித்துப் காட்டமான தொடர் விமர்சனங்களை முன்வைத்தார்: குறிப்பாக உலகின் மிகச் சக்திவாய்ந்த நாட்டின் அதிகாரத்தை ட்ரம்ப் போன்ற ஒருவரிடம் ஒப்படைத்திருப்பது ஒட்டுமொத்த உலகிற்கும் ஆபத்தானது. ட்ரம்ப் ஒரு பாலியல் பலாத்கார குற்றவாளி மற்றும் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற நபர். வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டவிரோதமானவை என வலியுறுத்தி உள்ளார். அத்துடன் மார்க் ருப்பலோ வெறும் பேச்சோடு நிற்காமல், தனது செயல்பாடுகள் மூலமும் தொடர் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்: மினியாபோலிஸ் நகரில் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ரெனி நிக்கோல் குட் என்ற பெண்ணிற்கு நீதி கோரி, அந்த வாசகம் அடங்கிய பேட்ச் (Patch) அணிந்து இவ்விழாவில் பங்கேற்றார். அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் போர்ப் போக்குகளுக்கு எதிராக இந்த இயக்கத்தின் மூலம் அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் மார்க் ருப்பலோவின் இந்த துணிச்சலான பேச்சு தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ________________________________________ Related News

Related Posts