டக்ளஸ் இணைப்பு செயலாளர் கைது!

டக்ளஸ் இணைப்பு செயலாளர் கைது!

by ilankai

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பு செயலாளராக கடமை ஆற்றிய குகப்பிரியன்  என்பவர், போதைப்பொருள் தொடர்பான பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்றைய தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குகப்பிரியன் குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு, விளையாட்டு திடல்கள் மற்றும் மாணவர்கள் கூடும் பொது இடங்களில் போதைப்பொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், போதைப்பொருள் வாங்கும் மற்றும் விநியோகிக்கும் முயற்சியின் போது முனையப் பகுதி ஒன்றில் குகப்பிரியன் பிடிபட்டதாகவும், பின்னர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Related Posts