யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான கேரள கஞ்சாப் பொதிகளை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். நாகர்கோவில் பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு (STF) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அங்கு விரைந்த அதிரடிப்படையினர் தீவிர தேடுதலை முன்னெடுத்த போது சுமார் 1.4 கிலோ கிராம் எடையுடைய 09 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் எவரும் அந்த இடத்தில் இருக்கவில்லை என்பதனால் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காகவும், சட்ட நடவடிக்கைக்காகவும் மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடல் வழியாக இந்தியாவிலிருந்து இந்த போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு, விநியோகத்திற்காக இங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். Tag Words: #JaffnaNews #DrugBust #Nagarkovil #KeralaGanja #PoliceSTF #Maradankerni #NarcoticsControl #SriLankaSecurity #VadamarachchiEast
🌿 நாகர்கோவில் பகுதியில் கஞ்சா மீட்பு – Global Tamil News
4