யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் அமைந்துள்ள அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றின் மீது அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட தீவைப்புச் சம்பவம் குறித்து தடயவியல் காவல்துறையினர் (Forensic Police) தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் கட்சி அலுவலகம் இயங்கி வரும் இரண்டு கடைகளைக் கொண்ட தொகுதிக்கே இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (14-01-2026) அதிகாலை வேளையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், அலுவலகத்தின் கதவுக்குத் தீ மூட்டிவிட்டுத் தப்பிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன. தீ வைக்கப்பட்ட போதிலும், கதவுகள் இரும்பினால் ஆனவை என்பதாலும், விரைவாகக் கண்டறியப்பட்டதாலும் பாரிய உயிர்ச் சேதங்களோ அல்லது சொத்துச் சேதங்களோ தவிர்க்கப்பட்டுள்ளன. சம்பவம் இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண தடயவியல் காவல்துறையினர், அங்கிருந்த தடயங்களைச் சேகரித்ததுடன், CCTV காட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபர்களைக் கைது செய்ய வலைவீசித் தேடி வருகின்றனர். அரசியல் உள்நோக்கம் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது தனிப்பட்ட பகை காரணமா என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. Tag Words: #JaffnaNews #ArsonAttack #ArunSiddharth #Thavady #PoliticalViolence #CCTVEvidence #ForensicInvestigation #SriLankaPolitics #SecurityAlert
⚖️ அருண் சித்தார்த்தின் அலுவலக கதவுக்கு தீ வைப்பு – விசாரணைகள் ஆரம்பம் – Global Tamil News
5
previous post