8
சட்டவிரோத மின் வேலியில் சிக்கி கணவன் – மனைவி உயிரிழப்பு வரக்காப்பொல, ஹுனுவல பிரதேசத்தில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி கணவன் – மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர். வயல் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஹுனுவல, துல்ஹிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான கணவரும், 58 வயதான மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்தச் சட்டவிரோத மின்சார இணைப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.