நெடுந்தீவு கடற்பரப்பு ஊடாக இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் புறாக்களைக் கடத்தி வந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, படகு மூலம் புறாக்களைக் கடத்தி வந்த இளைஞர்கள் பிடிபட்டுள்ளனர். கூடுகளில் அடைக்கப்பட்ட நிலையில் பெருமளவிலான புறாக்கள் இந்தியாவில் இருந்து படகு மூலம் நெடுந்தீவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட நெடுந்தீவைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்த காவல்துறையினா் கடத்தி வரப்பட்ட புறாக்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு ஆகியவற்றை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நெடுந்தீவு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இலங்கையில் புறாப்பந்தயங்கள் மற்றும் அரிய வகை புறா வளர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான கடத்தல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. Tag Words: #Neduntheevu #PigeonSmuggling #JaffnaNews #IndiaSriLankaSmuggling #WildlifeCrime #NeduntheevuPolice #IllegalTrade #SriLankaSecurity
இந்தியாவிலிருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூவா் கைது – Global Tamil News
4